Junction for Entertainment and Information

வணக்கம்,

பொழுதுபோக்கு திண்ணைக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி. இந்த திண்ணையில் உங்கள் வேலை பளு மற்றும் மன பாரங்களை இறக்கி வைத்து விட்டு சற்றே இளைப்பாறுங்கள்.

சினிமா, தொலைகாட்சி, திரை இசைப் பாடல்கள், கவிதைகள், பொது அறிவு, புதிர்கள், அறிவியல், ஓவியம், புகைப்படம், நகைச்சுவை, நைய்யாண்டி என்று உலகின் நல்ல விஷயங்களை ஆரோக்யமான முறையில் பகிர்ந்துக் கொள்ளலாம், அலசலாம் விவாதிக்கலாம் ஆராயலாம். உங்களுக்குத் தெரிந்த பலப் புது விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள், மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு தெரியாத விஷயங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

உங்கள் சிந்தனைகளுக்கு இங்கே வரவேற்பு உண்டு. உங்கள் மூளைக்கும் சிறிது வேலை உண்டு. இசையை ரசியுங்கள், நகைச்சுவைக்கு சிரியுங்கள்.

அறிவியலை அறியுங்கள், உங்கள் திறமையையும் பதியுங்கள் அதை மற்றவர்களுடன் பகிருங்கள்.

நம் துன்பத்தை மற்றவர்களுடன் பகிரும்போது நம் மன பாரம் பாதியாகிறது, நம் மகிழ்ச்சியை மற்றவரோடு பகிரும் போது அது இரட்டிப்பாகிறது.

இந்த திண்ணையில் உங்கள் மன பாரத்தை பாதியாக்கிக் கொள்ளுங்கள், உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ளுங்கள்.

ஆனால் இந்த திண்ணையில்.....

அரசியலுக்கு இடமில்லை.

நடிகர் நடிகை மற்றும் கலைஞர்களை பற்றி விவாதிப்பதோ, தரம் தாழ்த்தி பேசுவதோ அல்லது மற்ற கலைஞரோடு ஒப்பிட்டு பேசுவதோ இத்திண்ணையில் கூடாது.

ஆபாச பதிவுகளுக்கும் சமுதாயத்திற்கு எதிரான கருத்துகளுக்கு இங்கே இடமில்லை.

பெண்களை இழிவுப் படுத்தும் பதிவுகளும் இங்கு வேண்டாம்.

சக நண்பர்கள், நண்பிகளிடம் நாகரீகம் பேணுங்கள். குறிப்பாக பெண் உறுப்பினர்களிடம் ஒரு வரைமுரையோடு இருங்கள்.

மற்ற முகநூல் குழு மற்றும் பக்கங்களின் விளம்பரம் மற்றும் வியாபார விளம்பரங்களை தவிருங்கள்.

மேற்க்கண்டவை விதிமுறைகள் அல்ல, வேண்டுக்கோள்.

ஏனெனில் இது ஒரு குழு அல்ல ஒரு குடும்பம்.

நீங்கள் அனைவரும் குழு உறுப்பினர்கள் அல்ல குடும்ப அங்கத்தினர்கள்.

நம் குடும்பத்தை நாம் தான் பேணிக் காக்க வேண்டும்.

நல்லதையே பகிர்வோம் நலமாய் வாழ்வோம்.
நாமும் மகிழ்வோம் மகிழ்வை பகிர்வோம்.

நன்றியுடன்

நிர்வாகிகள் / குடும்பத் தலைவர்கள்

பார்த்திபன்
சுவாமிநாதன் நடராஜன்
அந்தோனி அருள்ராஜ்.