KANYAKUMARI - கன்னியாகுமரி

மிக நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட குமரி மாவட்டம் தமிழகத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட 1 நவம்பர் 2013 அன்று 58வது கன்னியாகுமரி தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு பாடுபட்ட தீரர்களையும் தியாகிகளையும் இந்த நேரத்தில் நினைவுக் கூர்வது அவசியம். அதற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந்தேதியை தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

குமரி மாவட்டத்தில் இன்று மலையாள மொழி பேசும் மக்களும் பல்வேறு சமயங்களை பின்பற்றுவோரும் சகோதரர்களாக இணைந்து வாழ்கிறார்கள். இதனால் கன்னியாகுமரிக்கு வருவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. இந்த நிலை தொடர வேண்டும். கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மத வேறுபாடின்றி உயர்வு அடைய வேண்டும் என்று போராடிய தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாம் மாவட்டத்தின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு அனைவரும் ஒன்று இணைந்து பாடுபடுவோம்.